வேலூர் மக்களவைத் தேர்தல் நாளை நடக்கவிருக்கும் நிலையில் தேர்தலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியாத்தம் அடுத்த காந்திநகர் பகுதியில் கே.வி. குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மையங்களில் 30ஆவது வாக்குச்சாவடி மையம் உள்ளது.
இந்த வாக்குச் சாவடி மையம் உள்ள பள்ளி வகுப்பறையில் நேற்றிரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் தேர்தலுக்காக பொருத்தப்பட்டிருந்த ஒரு சிசிடிவி கேமராவையும் பள்ளியிலிருந்த 11 கணினிகளையும் திருடிச் சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை கிராம நிர்வாக பணியாளர் பள்ளியை வந்து பார்த்தபோது சிசிடிவி கேமரா, கணினிகள் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.