ETV Bharat / state

சாதி பெயரை கூறி இழிவுப்படுத்தியதாக ஊராட்சி தலைவி புகார் - மூவர் மீது வழக்குப்பதிவு - assisstant chairperson was causing emotional distress by using the caste name

வேலூரில் சாதி பெயரை கூறி தன்னை இழிவுப்படுத்துவதாக ஊராட்சி தலைவி புகாரளித்த நிலையில், ஊராட்சி துணை தலைவர், அவரது கணவர் உள்பட மூவர் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

சாதி பெயரை கூறி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக ஊராட்சி தலைவர் பழங்குடியினர் ஆணையத்தில் புகார்

author img

By

Published : Aug 7, 2022, 1:57 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி தலைவியாக இருப்பவர் செல்வி. கணியம்பாடி ஊராட்சி துணை தலைவராக இருப்பவர் ஷகிலா. ஷகிலா மற்றும் அவரது கணவர் ரவி, தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதுடன், சாதி பெயரை கூறி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, தன்னை நாற்காலியில் உட்கார கூடாது என்றும் கீழே தரையில்தான் உட்கார வேண்டும் என்றும் இழிவாக பேசி, அவர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும் ஊராட்சி தலைவி செல்வி தெரிவித்துள்ளார்.

மேலும், சாதி பெயரை கூறி தன் மீது பழிவாங்கும் நோக்கில் செயல்படும் துணை தலைவர் மற்றும் அவரது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் ஊராட்சி தலைவர் செல்வி புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் பாதிக்கப்பட்ட கணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வியிடம் புகாரை பெற்ற வேலூர் தாலுகா காவல் துறையினர், ஊராட்சி மன்ற துணை தலைவரான ஷகிலா, அவரது கணவர் ரவி மற்றும் வெங்கடேஷன் ஆகிய 3 நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டுதல் உட்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மரம் விழுந்ததில் தந்தை,மகன் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.