ETV Bharat / state

வேலூரில் கடும் வெயில் - மக்கள் அவதி - 111 degrees Celsius

வேலூர்: கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே முதல் முறையாக 111 டிகிரி வெயில் பதிவாகியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 111 டிகிரி வெயில்
author img

By

Published : May 2, 2019, 11:25 PM IST

தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் வேலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் அதிக வெயில் பதிவாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் வழக்கம்போல் வேலூரில் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வேலூர் என்றால் ஜெயில்தான் ஞாபகம் வரும். ஆனால் தற்போது வேலூரில் கடும் அனல் காற்று வீசி வருவதால், வேலூரை வெயிலூர் என்று அழைக்கும் நிலைமை உருவாகியுள்ளது. பகல் நேரங்களில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். காலை 9 மணிக்கெல்லாம் வெப்பக் காற்று வீசுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வேலூர் மாவட்டம்

இந்நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக வேலூர் மாவட்டத்தில் வெயில் 110 டிகிரியை தாண்டி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதுவரை 108 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடித்து வந்தது. இன்று 111 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதால் புழுக்கம் தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வேலூரில் 111 டிகிரி வெயில் பதிவாகி உள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இன்னும் ஓரிரு தினங்களில் கத்திரி வெயில் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Intro:வேலூரில் இந்தாண்டு முதல் முறையாக 111 டிகிரி வெயில் பதிவு

வெப்பம் சுட்டெரிப்பதால் மக்கள் கடும் அவதி

Body:தமிழகத்தில் பிற மாவட்டங்களை காட்டிலும் வேலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் அதிக வெயில் பதிவாகும் அந்த வகையில் இந்த ஆண்டும் வழக்கம் போல் வேலூரில் கடந்த ஒரு மாதங்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது வேலூர் என்றாலே இங்கு உள்ள ஜெயில் தான் ஆரம்பத்தில் அனைவருக்கும் நினைவுக்கு வரும் காலப்போக்கில் வெயில் தாக்கத்தில் பிற மாவட்டங்களை முந்திக்கொண்டு வேலூர் மாவட்டம் முதலிடம் பிடிப்பதால் வேலூர் என்ற பெயரை வெயிலூர் என்று அழைக்கும் அளவிற்கு நிலைமை மாறியது கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு மேலும் அதிகரித்ததால் வேலூரில் கடும் அனல் காற்று வீசி வருகிறது இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர் காலை 9 மணிக்கெல்லாம் வெப்பக் காற்று வீசுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு முதல்முறையாக வேலூர் மாவட்டத்தில் வெயில் அளவு 110 டிகிரியை தாண்டி சாதனை படைத்துள்ளது அதாவது வேலூரில் இதுவரை அதிக மற்றும் 107 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடித்து வந்தது இன்று 111 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதால் வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது புழுக்கம் தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் குறிப்பாக முதியவர்கள் பெண்கள் குழந்தைகள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பெண்கள் சாலைகளில் குடையுடன் சொல்கின்றனர் கடந்த ஆண்டில் வேலூரில் 108 டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளது இந்த நிலையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே வேலூரில் 111 டிகிரி வெயில் பதிவாகி உள்ளதாக மாவட்ட பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர் இன்னும் ஓரிரு தினங்களில் கத்திரி வெயில் தொடங்குவதால் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.