வேலூரிலிருந்து கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப். செல்லும் அரசுப் பேருந்து ஒன்று, குடியாத்தம் அடுத்த வி. கோட்டா சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் ஒருவர் சாலையைக் கடந்துள்ளார். இதனை கவனித்த அரசுப் பேருந்து ஓட்டுநர், முதியவர் மீது மோதாமல் இருக்க பேருந்தை சாலையோரத்தில் திருப்பினார்.
இதனையடுத்து பேருந்து சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த கற்களின் மீது மோதியது. பின்னர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவரை மீட்ட காவல் துறையினர், அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் சிலருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன. அரசுப் பேருந்து ஓட்டுநரின் சமயோஜிதத்தால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: 'நீ உட்காருப்பா முதல்ல...' கர்நாடக பாஜக எம்.பி.க்களுக்கு எதிராக மக்களவையில் சீறிய சு.வெங்கடேசன்!