ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தல் பதற்றமான வாக்குச்சாவடிகள் இன்று அறிவிக்கப்படும்' - உள்ளாட்சித் தேர்தல் பணி

வேலூர்: மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்
வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்
author img

By

Published : Dec 5, 2019, 7:06 AM IST

வேலூர் மாவட்டத்தில் திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின்கீழ் வேலூர் பெண்ட்லன்ட் மருத்துவமனையில் காசநோயை விரைவில் கண்டறியும் சிகிச்சை வாகனத்தை அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கிவைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், அபாயகரமாக நோய்களில் ஒன்றான காசநோய் நாடு முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இருமல் மூலமாக பரவக்கூடிய இந்தநோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ள மக்களை எளிதாக தாக்குகிறது. காசநோய் உள்ளவர்களுக்கு எய்ட்ஸ் பரவும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

காசநோய் சிகிச்சை வாகனத்தை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 3,100 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் வீட்டிலிருக்கும் மற்றவருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று கண்காணித்து அவர்களின் சளி மாதிரியை ஆய்வு செய்வதற்காக "மொபைல் வாகனம்" திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வேலூர் வந்துள்ள இந்த வாகனம் இங்கு இரண்டு நாட்கள் இருக்கும். பின்னர் ஒவ்வொரு மாவட்டமாக இந்த வாகனம் செல்லும் என்றார்

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேட்டி

தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கேட்டபோது, ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் தேர்தல் அறிவிப்பு வந்த உடனே தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் தொடங்கப்பட்டுவிட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஏற்கனவே பட்டியல் வைத்துள்ளோம். வியாழக்கிழமை காலை அனைத்துக்கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டாலும் தேர்தல் பணிகளை வேலூர் மாவட்ட நிர்வாகம்தான் கவனித்து வருகிறது. தேர்தல் பணிகளுக்கு 40,000 பேர் தேவைப்படுகிறது. 36,000 பேரை ஏற்கனவே தேர்வு செய்துவிட்டோம். இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதால் பணியாளர் பற்றாக்குறை ஏற்படாது. ஊராட்சி தேர்தல்களுக்கு வாக்குச்சீட்டு முறையில் நடைபெறும். நகராட்சி பேரூராட்சிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படும்" என்றார்.

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து நாளை அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்படும் - வேலூர் மாவட்ட ஆட்சியர் பேட்டிBody:வேலூர் மாவட்டத்தில் திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் வேலூர் பென்லென்ட் மருத்துவமனையில் சளி பரிசோதனை மூலம் காசநோயை விரைவில் கண்டறியும் சிகிச்சை வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று துவக்கி வைத்தார். அதன்பிறகு பத்திரிகையாளரிடம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,
நாடு முழுவதும் அபாயகரமாக நோய்களில் காசநோய் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது இருமல் மற்றும் பிற வகைகள் மூலமாக இந்த நோய் வேகமாக பரவும். பாதிக்கக்கூடிய மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் எளிதில் அவர்களுக்கு இந்த நோய் தொற்றி விடும் குறிப்பாக இந்த நோய் உள்ளவர்களுக்கு எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது வேலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 3100 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் வீட்டிலிருக்கும் மற்றவருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று கண்காணித்து அவர்களின் சளி மாதிரியை ஆய்வு செய்வதற்காக "மொபைல் வாகனம்" தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது இந்த வாகனம் இன்று வேலூர் வந்துள்ளது இங்கு இரண்டு நாட்கள் இருக்கும் பின்னர் ஒவ்வொரு மாவட்டமாக இந்த வாகனம் செல்லும்" என்றார் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கேட்டபோது, ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் தேர்தல் அறிவிப்பு வந்த உடனே ஊரகப் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது நகாரட்சி மாநகராட்சி பகுதிகளுக்கு விதிமுறைகள் பொருந்தாது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஏற்கனவே பட்டியல் வைத்துள்ளோம். நாளை காலை அனைத்து கூட்டத்தில் இதுகுறித்து அறவிக்கப்படும். அதைதொடர்ந்து வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட கலெக்டர்கள் எஸ்ப்பிக்கள் கூட்டம் நடைபெறும் என்றார் அதன்பிறகு பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து இறுதி பட்டியலில் ஏற்படும் இருப்பினும் வேட்புமனுத்தாக்கல் முடிவுற்ற பிறகு இந்தப் பட்டியலில் மாற்றம் ஏற்படலாம் என்றால் வேட்பாளர்களை பொருத்து பதற்றமான வாக்குச்சாவடிகள் மாறுபடும். நாளை 288 மண்டல அதிகாரிகளுக்கு பயிற்சி நடைபெறுகிறது. வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டாலும் தேர்தல் பணிகளை வேலூர் மாவட்ட நிர்வாகம் தான் கவனித்து வருகிறது. தேர்தல் பணிகளுக்கு 40,000 பேர் தேவைப்படுகிறது. 36,000 பேரை ஏற்கனவே தேர்வு செய்து விட்டோம். இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதால் பணியாளர் பற்றாக்குறை ஏற்படாது. ஊராட்சி தேர்தல்களுக்கு வாக்கு சீட்டு முறையில் நடைபெறும். நகராட்சி பேரூராட்சிகளுக்கு மின்னணு வாக்கு இந்ந்திரம் பயன்படுத்தப்படும்" என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.