வேலூரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைக் கண்டித்து இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கையில் பதாகைகளை ஏந்தியபடி, இஸ்லாமியர்களைத் திட்டமிட்டு இந்தச் சட்டத்தில் புறக்கணிப்பதாகக் கூறி, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்