தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், திரையரங்குகள், மால்கள், பெரிய அளவிலான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் கிரிஸ்டியன்பேட்டை, சேர்காடு, பொண்ணை, பத்திரபல்லி, சயனகொண்டா, பரதராமி ஆகிய தமிழ்நாடு-ஆந்திர எல்லை பகுதிகளில் தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. பயணிகள் இ-பாஸ் பெற்றுள்ளனரா என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க உத்தரவிடுவோம் - சென்னை உயர்நீதிமன்றம்