வேலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் அதன் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் கட்டுமான தொழிலாளர் நல அலுவலகம் முன்பு வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏஐடியுசியின் மாநில துணைத் தலைவர் தேவதாஸ், "கட்டுமான தொழிலாளர்கள் அரசின் சலுகைகளுக்கு ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு படிப்பறிவு இல்லாத இந்த அடிமட்ட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
மோலும் கரோனா காலத்தில் அரசால் வழங்கப்பட்ட 1000 ரூபாய் நிவாரண நிதியை 50 விழுக்காடு கட்டுமான தொழிலாளர்கள் பெறாமல் உள்ளனர். குறிப்பாக முதியோர் ஓய்வூதியம் இன்று வரை கிடைக்கவில்லை.
இந்த தொகைகளை உடனடியாக அரசு வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார். பின்னர் போராட்டக்காரர்கள் தொழிலாளர் நல அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனர்.
இதையும் படிங்க: கரோனா நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஏஐடியுசி சார்பில் முற்றுகைப் போராட்டம்