கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து மக்கள் இந்த உத்தரவிற்கு முழுமையான ஒத்துழைப்பளிக்கவேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்காக அதிகளவில் மக்கள் கூட வாய்ப்புள்ள பல்பொருள் அங்காடிகளை தற்காலிகமாக மூடவும் உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட இரண்டு பல்பொருள் அங்காடிகளுக்கு கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார்.
மாவட்டத்தில் இதுபோன்ற செயல்கள் தொடரும்பட்சத்தில், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: தடையை மீறி திறந்த சிமெண்ட் கடைக்கு சீல்