வேலூர்: தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஸ்ரீதர் தலைமையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வேலூர் சர்க்கரை ஆலை நுழைவாயில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நடப்பாண்டு கரும்பு நிலுவை தொகையான 22 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும். 22, 23 ஆம் ஆண்டு அறவையை அக்டோபர் மாதம் தொடங்கிட வேண்டும்.
கரும்பு டன் ஒன்னுக்கு மாநில அரசு அறிவித்த 4 ஆயிரம் ரூபாயை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதையும் படிங்க: மின் கணக்கிடுவதை எளிமையாக்கும் வகையில் 'ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல்' - அமைச்சர் செந்தில் பாலாஜி