வேலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் ஆய்வுமேற்கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளர் ராஜிப் குமார் சென் இன்று வருகைதந்தார். அவரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஷ், அரசு அலுவலர்கள் வரவேற்றனர்.
அதன்பின் அவர், பல்வேறு அரசுப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வுமேற்கொண்டார். அதில் குறிப்பாக மேல்மணவூர் அரசு உயர்நிலைப்பள்ளி சென்ற அவர், பள்ளியின் கணினி வகுப்பறை, ஸ்மார்ட் வகுப்பு நடத்தப்படும் முறை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மாணவர்களிடம் அடிப்படை வசதிகள், உபகரணங்கள், மத்திய உணவு தரம், சென்ற இணைச் செயலாளர், மதிய உணவு தரம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், மாணவரின் கற்றல் திறன் மேம்பாடு, வருகைப்பதிவு குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: வேலூரில் பிரமாண்ட பூங்கா - ஆட்சியர் தகவல்