சென்னையைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர், மனைகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், அரக்கோணம் மோசூர் பகுதியில் இடம் வாங்கி அதை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்யும் பணிகளை முத்துராஜ் மேற்கொண்டுவந்துள்ளார்.
இதற்காக வீட்டுமனை அங்கீகார அனுமதி வாங்க துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவாவை அவர் அணுகியுள்ளார். அதற்கு ஜீவா, அனுமதி வழங்க வேண்டும் என்றால் ரூ. 70 ஆயிரம் கையூட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தியாகக் கூறப்படுகிறது.
ஆனால், கையூட்டு கொடுக்க முத்துராஜ் மறுத்துள்ளார். பேச்சுவார்த்தையின் இறுதியில் ரூ. 56 ஆயிரத்து 600-யை கையூட்டாகக் கொடுத்தால் அனுமதி வழங்குவதாக ஜீவா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பின்னர், இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் துறை அலுவலர்களிடம் முத்து ராஜ் புகாரளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை முத்துராஜிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இதைத்தொடர்ந்தது, முத்துராஜ் ஜுவாவிடம் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார். இதனை ரகசியமாகக் கண்காணித்துவந்த லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர், ஜீவாவை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்புக் காவல் துறை ஆய்வாளர் விஜய் தலைமையிலான குழுவினர் ஜீவாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.