வேலூர்: இன்ஃபன்ட்ரி சாலையில் அமைந்துள்ளது ஶ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 540 பேரும், ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 294 பேரும் தற்போது பள்ளியில் பயின்று வருகின்றனர்.
கரோனா ஊரடங்கிற்கு பிறகு ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறக்கப்பட்டு சில வாரங்களே ஆகியுள்ள நிலையில் கரோனா ஊரடங்கு காலத்தில் லைன் கட்டிங், பாக்ஸ் கட்டிங் போன்ற கட்டிங்குடன் பள்ளிக்கு வந்த மாணவர்களின் தலை முடியை பள்ளியின் தலைமை ஆசிரியர் நெப்போலியன் தன் சொந்த செலவில் இன்று (செப்.20) வெட்டிவிட்டார். மேலும், இன்று மட்டும் சுமார் 100 பேருக்கு முடி திருத்தம் செய்யப்பட்டது.
ஒழுக்கம்தான் முக்கியம்
![ஒழுக்கம் தான் முக்கியம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vlr-01-school-hm-dressed-students-hair-scr-vis-img-7209364_20092021143607_2009f_1632128767_839.jpg)
இதுகுறித்து நம்மிடம் பேசிய நெப்போலியன், "நான் மாணவர்களை பள்ளிக்கு முறையாக முடி வெட்டிவிட்டு வரும்படி பணிக்கின்றேன். முதலில் கல்வியைவிட ஒழுக்கம்தான் முக்கியம். ஒழுங்கற்ற முறையில் முடியை வெட்டிய மாணவர்களை பல முறை எச்சரித்தேன், ஒரு வாரம் அவகாசம் கொடுத்தும் பலரும் செவி சாய்க்காத காரணத்தால் இன்று என்னுடைய சொந்த செலவில் நானே ஆட்களை வைத்து அவர்களுக்கு ஹேர்கட் செய்தேன்.
மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது
![மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vlr-01-school-hm-dressed-students-hair-scr-vis-img-7209364_20092021143607_2009f_1632128767_247.jpg)
இதனை கடந்த ஆண்டும் செய்தேன், மக்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் எங்களுடைய பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கூட அதிகரித்தது. எனது இந்த முயற்சிக்கு காரணம் மாணவர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே.
பெற்றோர்களும் இதற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர், மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்களும் தங்களுடைய மகன்களுக்கு மிலிட்டரி கட்டிங் செய்து விடுங்கள் அல்லது மொட்டை அடித்து விடுங்கள் என்று கோபத்துடன் கூறுகின்றனர். நாங்கள் முடியை வெட்ட சென்னால் எங்களை மதிப்பது இல்லை, எனவே தாங்களே முடியை வெட்டி அனுப்பி விடுங்கள் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏதோ ஒரு காரணத்தால்
![முடி வெட்டி விட்ட பள்ளி தலைமை ஆசிரியர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vlr-01-school-hm-dressed-students-hair-scr-vis-img-7209364_20092021143607_2009f_1632128767_511.jpg)
மாணவர்களை ஒழுக்கமாக்கி அவர்களை அழகுப்படுத்துகிறேன். ஏதோ ஒரு காரணத்தால் மாணவர்கள் இது போன்ற ஒழுக்கமற்ற முறையில் முடியை வெட்டிவிட்டு பள்ளிக்கு வருகின்றனர். இதனை தடுப்பதற்கு அரசாங்கமும் சில வழிமுறைகளை தந்துள்ளது. இருப்பினும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை கலைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்" என்றார்.
![லைன் கட்டிங், பாக்ஸ் கட்டிங்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vlr-01-school-hm-dressed-students-hair-scr-vis-img-7209364_20092021143607_2009f_1632128767_744.jpg)
இதையும் படிங்க: தொழிற்கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - ஸ்டாலின்