ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட நேரு நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதமாக முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக முழுமையாக தண்ணீர் வரவில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் பல முறை நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணிப்பேட்டை காவல் துறையினர், வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்தையில், அலுவலர்களுடன் சமரசத்தை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சாலை, சாக்கடை வசதி இல்லை- உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு!