ETV Bharat / state

நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த தெருக்கூத்து கலைஞர் மரணம் - etv bharat

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த தெருக்கூத்து கலைஞர், மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆடிக்கொண்டிருந்தபோதே பிரிந்தது உயிர்
ஆடிக்கொண்டிருந்தபோதே பிரிந்தது உயிர்
author img

By

Published : Aug 11, 2021, 9:57 PM IST

வேலூர்: அணைக்கட்டை அடுத்த மேல் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கமலநாதன் (52). இவர் சிறு வயது முதலே தெருகூத்து நாடகங்களில் ஆடி வந்தார். மேலும் இவர் ஓம் சக்தி என்ற நாடக மன்றத்தின் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.

மேல் அரசம்பட்டு, மடிகம் கிராமத்தில் நேற்று முந்தினம் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு 'அர்ஜுனன் தபசு' என்னும் தெருகூத்து நாடகம் நடைபெற்றது. இதில் ஆசிரியர் கமலநாதன் அர்ஜுனன் வேடமிட்டு நேற்று (ஆக 10) ஆடிக் கொண்டிருந்தார்.

ஆடிக்கொண்டிருந்தபோதே பிரிந்தது உயிர்

அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த சக கலைஞர்கள் அவரை ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கருணாநிதி நினைவுநாள்: 130 மாரத்தானை நிறைவுசெய்த அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.