ETV Bharat / state

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: நடவடிக்கை கோரி மனு - against EB officer

வேலூர்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு மின் ஊழியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனு கொடுக்க வந்த காஞ்சனா
author img

By

Published : May 27, 2019, 2:13 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா கொசவன் புதூர் மேட்டுத் தெரு பகுதியில் வசிப்பவர் முருகேசன். இவரது மனைவி காஞ்சனா. முருகேசன் வெளியூரில் வேலை செய்து வருவதால் காஞ்சனா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டில் மின் கட்டணம் அளவீடு செய்ய வரும் மின்சார ஊழியர் ஒருவர், தன்னை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டுவதாக காஞ்சனா இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த பெண்

அந்தப் புகாரில் அவர், தனது வீட்டுக்கு பி.கே.புரம் மின் பிரிவிலிருந்து ரீடிங் எடுக்க வருபவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். கடந்த 5 மாதமாக அவர் தன் ஆசைக்கு இணங்கும்படியும், இல்லையென்றால் மின் இணைப்பை துண்டித்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்போது அந்த நபர் தன் கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தான் அவரை திட்டி அனுப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பி.கே.புரம் மின் அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது, அங்கே இருந்த அலுவலர்களும் தன்னை கிண்டல் செய்து ஏளனமாக பேசியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சம்பந்தப்பட்ட மின்சார ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

வேலூர் மாவட்டம்

ஆசைக்கு இணங்குமாறு மிரட்டும் மின் ஊழியர் -  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகார்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா கொசவன் புதூர் மேட்டுத் தெரு பகுதியில் வசிப்பவர் முருகேசன் இவரது மனைவி காஞ்சனா. முருகேசன் வெளியூரில் வேலை செய்து வருவதால் காஞ்சனா வீட்டில் தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில் தனது வீட்டில் மின் கட்டணம் அளவீடு செய்யும் மின்சார ஊழியர் ஒருவர் தன்னை ஆசைக்கு இணங்குமாறு விரட்டுவதாக காஞ்சனா இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார் அந்த புகாரில் அவர், " எனது வீட்டுக்கு பி.கே.புரம் மின் பிரிவில் இருந்து ரீடிங் எடுக்க வருபவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார் கடந்த 5 மாதமாக அவர் என்னை ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி வருகிறார் கடந்த மாதம் 15.03.2019 தேதி ரீடிங் எடுத்தார் அதற்குரிய பணம் ரூ.650 கட்டி விட்டோம் மீண்டும் இரண்டு முறை வந்து 650 கொடுக்காவிட்டால் மின் இணைப்பை துண்டித்தஉ விடுவேன் என்று மிரட்டினார் அப்போது அவர் என் கையை பிடித்து இழுத்து பாலியல்  தொந்தரவு கொடுத்தார் நான் உடனே, போடா நாயே, நான் அப்படிப்பட்ட பெண் அல்ல என்று கூறி அனுப்பினேன். பின்னர் 04.04. 2019 அன்று ரீடிங் எடுக்க எங்கள் பகுதிக்கு வந்தார் அப்போது அவரைக் கண்டு பயந்து ஒளிந்து கொண்டேன். ஆனால் எனது வீட்டிற்கு மட்டும் ரீடிங் எடுக்காமல் சென்று விட்டார் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது நீ என் ஆசைக்கு இணங்கும் வரை டி.எல்( டோர் லாக்) என்று போட்டு விடுவேன் என்று கூறினார் இதையடுத்து பி.கே.புரம் மின் அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது டி.எல் என்பதால் 2374 கட்டணம் என கூறி அங்கே இருந்த அதிகாரிகளும் என்னை கிண்டல் செய்து ஏளனமாக பேசினார்கள். எனவே சம்மந்தப்பட்ட மின்சார ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் குறிப்பிட்டுள்ளார் வீட்டில் தனியாக வசிக்கும் தன்னிடம் மின் ஊழியர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பெண் புகார் அளித்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.