ETV Bharat / state

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் காப்பீடு திட்டத்திற்கான பிரிவு தொடக்கம்! - மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான பிரிவு துவக்கம்

Vellore CMC Hospital: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட முதல்வர் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Vellore CMC Hospital
வேலூர் சிஎம்சி மருத்துவமனை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 3:57 PM IST

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் காப்பீடு திட்டத்திற்கான பிரிவு துவக்கம்!

வேலூர்: வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (செப்.20) பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவினை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திறந்த வைத்தார். பின்னர் புதிய மருத்துவக் காப்பீடு சிகிச்சைப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், "பிரதமர் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டங்கள் மூலம், நாட்டில் உள்ள ஏழை எளிய நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர். சிஎம்சி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தினால் தமிழ்நாட்டில் உள்ள நோயாளிகள் மற்றும் பிறமாநில நோயாளிகளுக்கும் பயனளிக்கும்.

இதன் மூலம் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து கூட வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவத்துறையில் சிறப்பாக செயல்படும் வகையில் மாவட்டத்திற்கு முன்னோடியாக இந்த மருத்துவமனை உள்ளது.

இதனால் பெரும்பாலான நோயாளிகளுக்கு பிரதம மந்திரியின் ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம் சிஎம்சி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் காப்பீடு திட்டங்களால் மக்களுக்கு பயனளிக்கும். மேலும் மருத்துவத்துறை மேம்பாடு அடைய ஆரோக்கியமான சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதுகலை மருத்துவ படிப்பில் சேர ஜீரோ பர்சன்டைல் மதிப்பெண்.. கல்வித்தரம் பாதிக்கும் என கல்வியாளர் கருத்து..

அதைத் தொடர்ந்து சிஎம்சி மருத்துவமனையில் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத்காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டதை குறித்து சிஎம்சி மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேஷ் ஐசையா கூறும்போது, "சிஎம்சி மருத்துவமனையில் பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் விபத்து காப்பீடு உள்ளிட்ட அனைத்து விதமான நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் எந்த பகுதியில் இருந்தாலும், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் பயன் பெறலாம்” என்று கூறினார்.

மேலும், “நம்மைக் காக்கும் 48 என்ற சிகிச்சை முறைத் திட்டத்தையும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் எந்த பகுதியில் விபத்தில் நடந்தாலும், அவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 24 படுக்கைகளுடன் கூடிய பிரதமர் காப்பீடு சிகிச்சை வார்டு தொடங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இந்த விழாவில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் பானுமதி மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட மருத்துவர்களும் செவிலியர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: "காவேரி விவகாரத்தில் ஒழுங்காற்று குழு கர்நாடகத்திற்கு ஆரவாக உள்ளது" - அமைச்சர் துரைமுருகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.