ETV Bharat / state

டெங்கு காய்ச்சலுக்கு ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு; வேலூரில் சோகம்! - டெங்குவின் அறிகுறி

வேலூர்: மாதனூர் அகரம் கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

six year old boy died by dengue fever in vellore
author img

By

Published : Oct 31, 2019, 7:46 AM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அகரம் புதுமனை கிராமத்தில் வசித்து வருபவர் அருள். கூலி தொழிலாளியான இவருக்கு அனிதா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதில், இரண்டாவது மகன் ஹரிஷ்(6) அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஹரிஷ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள மராட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பப்பட்டு பின்னர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

உயிரிழந்த சிறுவன் ஹரிஸ்

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனுக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பதாகக் கூறி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 9 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து அகரம் பகுதிக்குச் சென்ற வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர், ஆம்பூர் வட்டாட்சியர், மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சென்று விசாரணை மேற்கொண்டபோது, சிறுவனின் உறவினர்கள் அவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையம் படிங்க: 15 ரூபாய்க்கு விற்கப்படும் போதை ஊசிகள்; தமிழ்நாட்டிற்குள் ஊடுருவிய போதை ஊசி கும்பல்!

Intro:ஆம்பூர் அருகே டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுவன் உயிரிழப்புBody:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அகரம் புதுமனை கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி அருள் அனிதா தம்பதியரின் இரண்டாவது மகன் அரிஷ் வயது 6 அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அரிஷ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள மராட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மறுநாள் மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் அங்கு மருத்துவர்கள் பரிசோதிக்கப்பட்டு பிறகு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு டெங்கு அறிகுறி இருப்பதை கண்டறிந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி வேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளான் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் ஆகியோர் சிறுவனின் சொந்த ஊரான அகரம் பகுதிக்குச் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டபோது அப்பகுதி மக்கள் அவர்களை சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது...

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.