ETV Bharat / state

SI Audio: ஆளும் கட்சிப் பிரமுகர்கள் தொல்லை - தற்கொலை செய்யப்போவதாக ஆடியோ வெளியிட்ட எஸ்ஐ - SI going to commit suicide due to harassment by dmk

SI Audio: "ஆளும் கட்சிப் பிரமுகர் தொல்லை தாங்க முடியல. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்'' என உதவி ஆய்வாளர் ஒருவரின் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஆடியோ வெளியிட்ட உதவி ஆய்வாளர்
ஆடியோ வெளியிட்ட உதவி ஆய்வாளர்
author img

By

Published : Dec 29, 2021, 8:20 PM IST

வேலூர்: SI Audio: அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர், சீனிவாசன்.

இவர், "நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்" எனப் பேசிய ஆடியோ தற்போது வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த ஆடியோவில் , 'வணக்கம் சார். நான் வேப்பங்குப்பம் எஸ்.ஐ சீனிவாசன். டிசி குப்பத்தைச் சேர்ந்த துளசி என்ற பெண் 10 லட்சம் ரூபாய்க்கு சீட்டு நடத்தி வருகிறார்.

சீட்டு எடுத்தவர்கள் நிலுவைத்தொகை பணத்தை கேட்டுள்ளனர். இதை ஆய்வாளர் உலகநாதன் விசாரித்துள்ளார்.

அவர் சரியாக விசாரணை செய்யாததால், கடந்த 26ஆம் தேதி பணம் கேட்டு சென்றவர்களுக்கும், துளசிக்கும் இடையே அடிதடி நடந்துள்ளது. இதில் துளசி தாக்கப்பட்டதாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

போலீஸை மிரட்டிய திமுக பிரமுகர்

இவரிடம் நான் போய் வாக்குமூலம் வாங்கி வழக்குப்பதிவு செய்ய இருந்தபோது, டிசி குப்பத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என என்னை மிரட்டினார்.

ஏன் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என நான் கேட்க, தான் ஆளும் கட்சிப் பிரமுகர் எனக் கூறுகிறார். நான் என்ன செய்ய முடியும்.

மு. பாபு, பிரகாஷ், கணபதி ஆகிய திமுக பிரமுகர்களின் தொல்லை தாங்க முடியலை. அதனால் நான் இன்று இரவு தற்கொலை செய்யப்போகிறேன். காவல் கண்காணிப்பாளரிடம் நான் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பதைக் கூறிவிட்டேன். எனக்கு மேலும் தொல்லை கொடுத்தால் நான் என்ன செய்ய முடியும்.

ஆடியோ வெளியிட்ட உதவி ஆய்வாளர்

மணல் திருடுகிறார்கள். கேட்டால் நான் பாபு பேசுறேன் விட்டுவிடு. கணபதி பேசுறேன் விட்டுவிடு எனக் கூறுகிறார்கள். நான் என்ன பண்ண முடியும்.

எனக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது. என்னால வாழ முடியவில்லை, நான் போயிடுறேன். என்ன விட்டுவிடுங்கள். என்னோட பணத்தை அரசிடம் இருந்து வாங்கி என்னோட குழந்தை, மனைவியிடம் கொடுத்துவிடுங்கள்'' என்றார்.

இதையும் படிங்க: Theft in Director house: விஜய் சேதுபதி பட இயக்குநர் வீட்டில் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.