திருப்பத்தூருக்கு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கந்திலி புதுப்பேட்டை, ஜோலார்பேட்டை, விசமங்களம், மாடப்பள்ளி, கொரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் சவாரி நடைபெறுகிறது.
இந்த நிலையில், திருப்பத்தூர் நகரில் சமீபகாலமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம், மீனாட்சி திரையரங்கம், புதுப்பேட்டை ரோடு, ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ நிறுத்தங்களில் சாலை மற்றும் கடைகளின் அருகில் வரிசையாக ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு 10 முதல் 15 பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாகக் கூறி திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமாருக்கு வியாபாரிகள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுநர்களிடம் இனி ஸ்டேண்டுகளில் 1+1 என பயணிகளை 6 பேருக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது என அறிவுறித்தியுள்ளனர். இதனை ஓட்டுநர்கள் கடைபிடிக்காமல் இருந்த நிலையில், நேற்று அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதாக ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று போக்குவரத்து காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
'உள்ளாட்சித் தேர்தல் பதற்றமான வாக்குச்சாவடிகள் இன்று அறிவிக்கப்படும்'