ETV Bharat / state

பாதாள சாக்கடை திட்ட பணியால் அல்லல்படும் பொதுமக்கள்! - பாதாள சாக்கடை திட்ட பணி

வேலூர்: பாதாள சாக்கடை திட்ட பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வேலூர்
author img

By

Published : Jul 9, 2019, 9:15 PM IST

வேலூர் மாநகராட்சியில் ரூ.700 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை புதுப்பித்தல், வேலூர் கோட்டையை பழமை மாறாமல் சீரமைத்தல, வேலூர் மாநகரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதற்காக தெருக்களின் சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. குழாய் பதிக்கப்பட்டு அதன் பிறகு வீடு வீடாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் வேலூர் மாநகரில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுபோல் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பள்ளத்தில் தண்ணீர் தேங்குவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. மேலும், பல இடங்களில் பள்ளம் தோண்டும்போது தண்ணீர் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் தண்ணீர் வீணாகி வருகிறது.

அந்த வகையில் வேலூர் மாவட்டம் கல்லறைத் தோட்டம் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் ஒன்றாவது குறுக்குத் தெரு பகுதியில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டு 10 நாட்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளம் தோண்டும்போது பாறை இருப்பதாக காரணம் காட்டி கடந்த இரண்டு வாரங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டு மணல் குவிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் அந்த தெருவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன அந்த குழாய் இணைப்புகளும் சேதம் அடைந்ததால் தண்ணீர் வீணாகிறது. ஏற்கனவே வேலூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் சூழ்நிலையில் இதுபோன்று தண்ணீர் வீணாகி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முடங்கி கிடக்கும் பாதாள சாக்கடை திட்ட பணி

இதுகுறித்து கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், "பாதாள சாக்கடைக்காக ஒரு மாதத்திற்கு முன்பு எங்கள் பகுதியில் பள்ளம் தோண்டினார்கள். ஆனால் கடந்த 10 நாட்களாக இந்த வேலை நடைபெறவில்லை. பள்ளம் தோண்டப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. குறிப்பாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் குடியிருப்போர் நலச் சங்கம் மூலமாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்" என்றனர்.

Intro:வேலூரில் பாதாள சாக்கடை திட்ட பணியால் அல்லல்படும் பொதுமக்கள்

பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்து தண்ணீர் வீணாகும் அவலம்

மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

Body:வேலூர் மாநகராட்சியில் ரூ.700 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன இந்த திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை புதுப்பித்தல் வேலூர் கோட்டையை பழமை மாறாமல் சீரமைத்தல் மற்றும் வேலூர் மாநகரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது இதற்காக தெருக்களில் சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது குழாய் பாதிக்கப்பட்டு அதன் பிறகு வீடு வீடாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட உள்ளது இந்த நிலையில் வேலூர் மாநகரில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் இதுபோல் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பள்ளத்தில் தண்ணீர் தேங்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது பல இடங்களில் பள்ளம் தோண்டும் போது தண்ணீர் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது தண்ணீர் வீணாகி வருகிறது அந்த வகையில் வேலூர் மாவட்டம் கல்லறைத் தோட்டம் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் 1வது குறுக்குத்தெரு பகுதியில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டு 10 நாட்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர் பள்ளம் தோண்டும்போது பாறை இருப்பதாக காரணம் காட்டி கடந்த இரண்டு வாரமாக பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டு மணல் குவிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அதேபோல் அந்த தெருவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன அந்த குழாய் இணைப்புகள் சேதம் அடைந்ததால் தண்ணீர் வீணாகிறது ஏற்கனவே வேலூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் சூழ்நிலையில் இது போன்று தண்ணீர் வீணாகி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், " பாதாள சாக்கடைக்காக ஒரு மாதத்திற்கு முன்பு எங்கள் பகுதியில் பள்ளம் தோண்டினார்கள் ஆனால் கடந்த 10 நாட்களாக இந்த வேலை நடைபெறவில்லை பள்ளம் தோண்டப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை குறிப்பாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் குடியிருப்போர் நலச் சங்கம் மூலமாக புகார் அளித்தோம் இருப்பினும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்" என்றனர் இது குறித்து வேலூர் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்பதற்காக பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை அவரது மொபைல் நம்பருக்கு அழைத்தபோது மீட்டிங்கில் இருப்பதாக கூறி தட்டிக் கழித்து விட்டார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.