ETV Bharat / state

'பட்டியலினத்தவரை மேலும் ஒடுக்குவதற்கு... 10% இடஒதுக்கீடு!'

வேலூர்: பட்டியலின மக்களை மேலும் ஒடுக்குவதற்காகவே பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்க நினைப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

சீமான்
author img

By

Published : Jul 24, 2019, 3:06 PM IST

வேலூர் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நேற்று மாலை பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் சீமான் பேசுகையில், "தமிழ்நாட்டில் திமுகவை விட்டால் அதிமுகதான், அதிமுகவை விட்டால் திமுகதான் என்று அரை நூற்றாண்டுகளாக வாக்களித்து வறுமையும் ஏழ்மையும் சந்தித்த மக்களுக்கு இரண்டு பேரையும் விட்டால், ஒரு மாற்றாக நாம் தமிழர் கட்சி என்று நாங்கள் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக தொடர்ச்சியாக களத்தில் இறங்கி போராடிவருகிறோம்.

பிரதமர் மோடி தான் பதவியேற்றவுடன் அனைத்து கோயில்களுக்கும் சென்று தாமரை வழங்கிவந்தார். அவருக்கு நம் நாட்டில் நிலவிவந்த குடிநீர் சிக்கல் பற்றி கவலை இல்லை.

இந்த மத்திய அரசின் ஆட்சி ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மக்கள் வாழவே கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. தற்போது பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு ஒதுக்கீடு கொண்டுவருவதாக கூறுகிறார்கள்.

அவர்கள்தான் முன்னேறிவிட்டார்களே பிறகு எதற்காக அவர்களுக்கு இட ஒதுக்கீடு. நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவரே கோயிலுக்குள் செல்ல முடியவில்லை; அந்தளவுக்கு நாட்டில் தீண்டாமை உள்ளது.

சீமான்

சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலை சமூகம் ஒன்று மலரும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அதில் ஓங்கி ஒரு சம்மட்டியை வைத்து அடிப்பது போல் முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் மத்திய அரசு இட ஒதுக்கீடு கொடுக்க இருக்கிறார்கள். இது பட்டியலின மக்களை மேலும் ஒடுக்க நினைக்கும் செயல்" எனத் தெரிவித்தார்.

Intro:வேலூர் மாவட்டம்

தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை மேலும் ஒடுக்குவதற்காகவே உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்க நினைக்கிறார்கள் - வேலூர் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி மீது சீமான் சரமாரி குற்றச்சாட்டு
Body:வேலூர் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இன்று பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் சீமான் பேசுகையில், "தமிழகத்தில் திமுகவை விட்டால் அதிமுக தான் அதிமுகவை விட்டால் திமுக தான் என்று அரை நூற்றாண்டுகளாக வாக்களித்து வறுமையும் ஏழ்மையும் சந்தித்த மக்களுக்கு இரண்டு பேரையும் விட்டால் ஒரு வழியாக ஒரு மாற்றாக நாம் தமிழர் என்று நாங்கள் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக தொடர்ச்சியாக நாங்கள் களத்தில் இருக்கிறோம் அடுத்து நடக்க இருக்கின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் நாம் தமிழர் கட்சியை மையப்படுத்திதான் இருக்கும் நாங்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறோம் என்பதை உற்றுப் பார்ப்பார்கள் பிரதமர் மோடி தான் பதவியேற்றவுடன் அனைத்து கோவில்களுக்கும் சென்று தாமரை வழங்கி வந்தார் அவருக்கு நாட்டில் நிலவி வந்த குடிநீர் பிரச்சினை பற்றி கவலை இல்லை இந்த ஆட்சி ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மக்கள் வாழவே கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளனர் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10% ஒதுக்கீடு கொண்டு வருவதாக சொல்கிறார்கள் அவர்கள்தான் முன்னேறிவிட்டார்களே பிறகு எதற்காக அவர்களுக்கு இட ஒதுக்கீடு நாட்டின் முதல் குடிமகன் இந்திய ஜனாதிபதியே கோயிலுக்குள் செல்ல முடியவில்லை அந்தளவுக்கு நாட்டில் தீண்டாமை உள்ளது சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலை சமூகம் ஒன்று மலரும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அதில் ஓங்கி ஒரு சமட்டியை வைத்து அடிப்பது போல் முன்னேறிய வகுப்பினர்களுக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க இருக்கிறார்கள். இது தாழ்த்தப்பட்ட சலூகத்தினரை மேலும் ஒடுக்க நினைக்கும் செயல். ஒரே நாளில் பணம் செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடி ஒரே நாளில் சாதியற்ற நாடு என்று அறிவிக்க முடியுமா? இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று கூறும் பாஜகவால் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் வரி செலுத்த வேண்டாம் என்று கூற முடியுமா? சமஸ்கிருதத்தை படிக்கச் சொல்லுகிறார்கள். நாங்கள் அதை எதற்கு படிக்க வேண்டும் அது எந்த மாநிலத்தில் ஆட்சி மொழியாக இருக்கிறது எதற்காக படிக்க வேண்டும். ஏனென்றால் அது ஆர்எஸ்எஸ்சின் தாய்மொழியாகும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்கிறார்கள் ஏற்கனவே நடந்த பாராளுமன்ற தேர்தலில் நான்கு கட்டங்களாக நடத்துகிறார்கள் அப்படி இருக்கும்போது ஒரே நாளில் எப்படி எல்லா மாநிலத்திற்கும் தேர்தல் நடத்துவீர்கள் திருடர்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் திமுக கட்சி உள்ளது அங்கு தளபதி ஒருவர் இருக்கிறார் தற்போது இளைய தளபதி உருவாகியிருக்கிறார். கட்சி தலைவரை அவர்கள்( ஸ்டாலின் குடும்பம்) வீட்டில் இல்லாத ஒரு நபரை அவர்களால் கொண்டுவர முடியவில்லை" என்று பேசினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.