வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள ஐடிஐ கல்லூரி மாணவன் சஞ்சய் என்பவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த திலீப்குமார்,கணேஷ் மற்றும் திலீப் (மூன்று பேரும் பள்ளி மாணவர்கள்) ஆகியோருக்குமிடையே நேற்று மாலை குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சஞ்சய் தாக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று ஆம்பூர் அடுத்த மாதனூர் பேருந்து நிலையம் அருகே திலீப், கணேஷ்மற்றும் திலீப்குமார் ஆகியோர் சென்றுகொண்டிருந்தபோது சஞ்சய், அவரது சகோதரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து திலீப்குமார் உள்ளிட்ட மூன்றுபேரை சரமாரியாக தாக்கினர். இதில், பள்ளிமாணவன் திலீப்குமாரின் நண்பன் கிரி என்பவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.