ETV Bharat / state

புதிய ஃபார்முலாவை கையில் எடுக்கும் காவல் துறை: பிரபல ரவுடி கைது! - காவல்துறை

வேலூர்: பிரபல ரவுடி வீச்சு தினேஷ்யை கைது செய்வதற்கு துரத்தி பிடிக்கும் போது, ரவுடி வலுக்கி கீழே விழுந்ததில் வலது கால் எலும்பு முறிந்து மாவு கட்டுப் போடப்பட்டுள்ளது. இது போன்று, குற்றவாளிகள் மாவு கட்டு போடுவது காவல் துறையின் புதிய ஃபார்முலாவாக உள்ளது என்று கூறப்படுகிறது.

rowdy
author img

By

Published : Aug 27, 2019, 8:58 PM IST

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(எ) வீச்சு தினேஷ். இவரை பல்வேறு வழக்குகளின் கீழ் காவல் துறையினர் தேடிவந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ் புதுப்பேட்டையில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்தபோது காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

தினேஷ் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என பல்வேறு பிரிவுகளில் பல காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் ஆவின் தலைமை அலுவலகம் முன்பு பாம் செல்வராஜ் என்பவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கிலும் ரவுடி வீச்சு தினேஷ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சத்துவாச்சாரி காவல் துறையினர், வீச்சு தினேஷை தீவிரமாக தேடிவந்தனர். வீச்சு தினேஷ் தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய பார்முலாவை கையில் எடுக்கும் காவல்துறை

இந்நிலையில், சமீபகாலமாக காவல்துறையால் கைது செய்யப்படும் குற்றவாளிகள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கட்டு போடுவதுபோல் தற்போது இந்த ரவுடிக்கும் கட்டுப்போடப்பட்டு உள்ளது. ஆனால் வழக்கமான காரணத்தைக் கூறாமல் இந்த முறை ரவுடியை துரத்திப் பிடிக்கச் சென்றபோது அவர் ஓடிய கரடு முரடான பாதையில் வழுக்கி விழுந்து ரவுடி வீச்சு தினேஷுக்கு வலது கால் முறிந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் ரவுடி வீச்சு தினேஷிற்கு மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதற்கிடையில் ரவுடி வீச்சு தினேஷ் கடந்த இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பே கைது செய்யப்பட்டார். ஆனாலும் மூன்று நாட்களாக அவருக்கு அடிப்பட்டது போன்ற ஃபோட்டோவை வெளியிடாமல் காவல் துறையினர் ரகசியம் காத்துவந்தனர்.

பிரபல ரவுடி என்பதால் யாரும் போட்டோ எடுக்கக்கூடாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு தற்போது ரவுடி வீச்சு தினேஷ் வலது காலில் பலத்த காயங்களுடன் மாவுகட்டு போடப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Intro:புதிய பார்முலாவை கையில் எடுத்த வேலூர் காவல்துறை - துரத்தி பிடிக்கும்போது வழுக்கி விழுந்ததில் பிரபல ரவுடியின் கால் முறிந்தது மூன்று நாட்கள் ரகசியம் காத்த போலீசார்Body:வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(எ) வீச்சு தினேஷ். இவரை பல்வேறு வழக்குகளின் கீழ் காவல்துறையினர் தேடி வந்தநிலையில் வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ் புதுப்பேட்டையில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த போது காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் அப்போது ரவுடி வீச்சு தினேஷ் ஐந்து பெண்களுடன் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது இவர் மீது கொலை கொள்ளை ஆள்கடத்தல் என பல்வேறு பிரிவுகளில் பல காவல்நிலையத்தில் வழக்கு நிலையில் உள்ளது குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் ஆவின் தலைமை அலுவலகம் முன்பு பாம் செல்வராஜ் என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த வழக்கிலும் ரவுடி வீச்சு தினேஷ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து சத்துவாச்சாரி காவல்துறையினர் வீச்சு தினேஷை தீவிரமாக தேடிவந்தனர் இந்த சூழ்நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த நிலையில் சமீபகாலமாக காவல்துறையால் கைது செய்யப்படும் குற்றவாளிகள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கட்டு போடுவது போன்று தற்போது இந்த ரவுடிக்கும் கட்டுப் போடப்பட்டு உள்ளது ஆனால் வழக்கமான காரணத்தைக் கூறாமல் இந்த முறை ரவுடியை துரத்திப் பிடிக்க சென்றபோது அவன் ஓடியபோது கரடு முரடான பாதையில் வழுக்கி விழுந்து ரவுடி வீச்சு தினேஷுக்கு வலது கால் முறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இதையடுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் ரவுடி வீச்சு தினேஷிற்கு மாவுக்கட்டு போடப்பட்டது இதற்கிடையில் ரவுடி வீச்சு தினேஷ் கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பே கைது செய்யப்பட்டார் ஆனாலும் மூன்று நாட்களாக அவருக்கு அடிப்பட்டது போன்ற போட்டோவை வெளியிடாமல் காவல்துறையினர் ரகசியம் காத்து வந்தனர் பிரபல ரவுடி என்பதால் யாரும் போட்டோ எடுக்கக்கூடாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது இந்த நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு தற்போது ரவுடி வீச்சு தினேஷ் வலது காலில் பலத்த காயங்களுடன் மாவுகட்டு போடப்பட்டிருப்பது போன்ற புகைப்படத்தை தற்போது வேலூர் காவல்துறையினர் கூறியுள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.