வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு அருகே பிரபல தனியார் நிறுவனம் விவோ மொபைல் ஷோரூம் இயங்கிவருகிறது. இங்கு நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத கும்பல் ஷோரூமின் ஷட்டரை உடைத்து செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை கடையை திறக்க வந்த ஊழியர்கள் ஷோரூமின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கடைக்குள் சென்று பார்த்தபோது, பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடைப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். திருடிச் சென்ற செல்போன்களின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கலாம் எனக் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: மினி லாரி மீது கார் மோதிய விபத்து: மூவர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்