ETV Bharat / state

வேலூரில் மிளகாய்ப் பொடி தூவி ரூ.2.75 லட்சம் வழிப்பறி: மூவர் கைது - வேலூரில் பணக் கொள்ளை

வேலூரில் லாரி ஓட்டுநர், கிளினரை கம்பியால் தாக்கியும், மிளகாய்ப் பொடி தூவியும் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த வேலூரைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

மிளகாய் பொடி தூவி லட்சக்கணக்கான பணக்கொள்ளை : மூவர் கைது

author img

By

Published : Jan 8, 2022, 9:42 PM IST

வேலூர்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா சின்னநெற்குணம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் வடிவேலு (42). இவர் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு மற்றொரு ஓட்டுநர் அன்பழகனுடன் சென்றுள்ளார்.

அங்கு நெல் மூட்டைகளை இறக்கிவிட்டு அதற்கான பணத்துடன் வேலூர் நோக்கிவந்தனர். கொணவட்டம் அருகே லாரியை நிறுத்திய வடிவேலு தனது உரிமையாளரை போனில் தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு காரில் வந்த மூன்று பேர் திடீரென இரும்புக் கம்பியால் வடிவேலுவைத் தாக்கியுள்ளனர்.

மிளகாய்ப் பொடி வீசிக் கொள்ளை

அவரின் சத்தம் கேட்டு லாரியில் தூங்கிக் கொண்டிருந்த அன்பழகன் எழுந்துவந்து தடுக்க முயன்றபோது மூவரும் மிளகாய்ப் பொடியை எடுத்து இருவரின் முகத்திலும் வீசி அவர்கள் வைத்திருந்த இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயைப் பறித்துக் கொண்டு உடனடியாக தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து, வடிவேலுவும், அன்பழகனும் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே நேற்று (ஜனவரி 7) காலை நேஷனல் தியேட்டர் சந்திப்பு அருகே காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மூவரைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் லாரி ஓட்டுநரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.

கொள்ளையர்கள் கைது

விசாரணையில் சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (37), காட்பாடி கோபாலபுரம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த சரண்ராஜ் (32), தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தீனா என்ற விஷ்ணு (32) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து மூவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய், மூன்று இரும்புக் கம்பிகளையும் பறிமுதல்செய்தனர். இது குறித்து தொடர் விசாரணைக்குப் பிறகு மூவரையும் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மோசடி விவகாரம்: சத்தமில்லாமல் சிக்கிய முன்னாள் வங்கி அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.