வேலூர் மாவட்டம் வாணியம்பாடி உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 11ஆவது வார்டு பகுதியில் கடந்த 25 ஆண்டுகாலமாக அப்பகுதி மக்கள் சாலைவசதி , கால்வாய் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபிலிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதன் பேரில் உதயேந்திரம் 11ஆவது வார்டு, சி.வி. பட்டறை பகுதியில் இரண்டு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான தார்சாலை, மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியினை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில், இன்று பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர், அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சரிடம், பல ஆண்டுகாலமாக இயங்காமல் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை சமுதாய கூடமாக மாற்றியமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர், பள்ளியை நேரில் சென்று பார்வையிட்டு பேரூராட்சி அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார் .
மக்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். 25 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கும் அமைச்சருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் பிடெக் நாட்டிக்கல் சயின்ஸ் பட்டப்படிப்பு தொடக்கம்