ETV Bharat / state

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - thiruppathur district news in tamil

திருப்பத்தூர்: கடந்த ஒரு வருட காலமாக குடிநீர் விநியோகம் தடைபட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

water problem
water problem
author img

By

Published : Jan 9, 2020, 7:39 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த முத்தனப்பள்ளி கிராமப் பகுதியில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் விநியோகம் தடைபட்டதால் திடீரென்று 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் டோல்கேட் - பச்சூர் செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோயில் அருகில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பலமுறை அலுவலர்களிடம் மனு அளித்தும் குடிநீர் கிடைக்காததால் ஆத்திரத்தில் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது. விரைந்துவந்த நாட்டறம்பள்ளி காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவார காலத்திற்குள் குடிநீர் பிரச்சனை சரி செய்யப்படும் என்று கூறியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்துசென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்ற எதிர்ப்பு - ஆளுநருக்கு பேராசிரியர்கள் கடிதம்

Intro:நாட்றம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்- போலீசார் சமரசம்
Body:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த முத்தனப்பள்ளி கிராம பகுதியில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் விநியோகம் தடைபட்டதால் திடீரென்று 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் டோல்கேட் - பச்சூர் செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோயில் அருகில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் குடிநீர் கிடைக்காததால் ஆத்திரத்தில் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் போக்குவரத்து தடைபட்டது. விரைந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வார காலத்திற்குள் குடிநீர் பிரச்சனை சரி செய்யப்படும் என்று கூறியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.