வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்துவருகிறார்கள். இவர்களுக்கு மாதந்தோறும் அந்தக் கிராமத்தில் பணி வழங்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கார்ணாம்பட்டு காலனி பகுதியை சேர்ந்த மக்களுக்கு மட்டும் 100 நாள் வேலை வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊராட்சி செயலாளரை தொடர்பு கொண்டு பலமுறை அந்தக் கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். ஆனாலும் அந்தக் கிராம மக்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.
இதனால் அந்தக் கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டு வேலையில்லாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று (ஆகஸ்ட் 21) காட்பாடி - திருவலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக காட்பாடி திருவலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவலம் காவல் துறையினர், ஊராட்சி செயலாளர் சிவா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, வரும் திங்கள்கிழமை முதல் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
100 நாள் வேலை வழங்காததைக் கண்டித்து சாலை மறியல் - வேலூர் மாவட்ட செய்திகள்
வேலூர்: காட்பாடி அருகே இரண்டு மாதங்களாக நூறுநாள் வேலைவாய்ப்பு வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.