வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த வீ.கோட்டா சாலையில் இதூக்கா என்ற பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று முன் தினம் (ஆக.23) இரவு முழுவதும் வீ.கோட்டா சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
அப்போது அவ்வழியாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 40 மூட்டைகளில் சுமார் இரண்டு டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரேஷன் அரிசியுடன் மினி லாரி பறிமுதல்
மேலும் வாகனத்தை ஓட்டி வந்த இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடியதால், ரேஷன் அரிசியுடன் மினி லாரியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். தற்போது இச்சம்பவம் குறித்து அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குப்பைத் தொட்டி அருகே கிடந்த மண்டை ஓடால் பொதுமக்கள் பீதி!