வேலூர் மாவட்டத்திலிருந்து ராணிப்பேட்டை புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, பல்வேறு நிர்வாக வசதிகள் குறித்த பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு தலைமை மருத்துவமனையில், நேற்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரை அங்கிருந்த அரசு மருத்துவர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் பல்வேறு வார்டுகளுக்குச் சென்று நோயாளிகளையும் சந்தித்தார். அதைத்தொடர்ந்து மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். குறிப்பாக மருத்துவமனையில் போதிய இடவசதி உள்ளதா என்றும் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை உபகரணங்கள் இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: கடனை திருப்பிக் கொடுத்த லைகா - 'தர்பார்' வெளியீட்டில் பிரச்னை இல்லை