முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் முருகன். தற்போது உயிருக்குப் போராடி வரும் தனது தந்தையை, காணொலி அழைப்பு மூலம் ஒருமுறை பார்க்க அனுமதி வழங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், வழக்கறிஞர் புகழேந்தி மூலம் கடிதம் வழியாக கோரிக்கை வைத்துள்ள முருகன், தனது தந்தை வெற்றிவேல் (வயது 75) தற்போது இலங்கை யாழ்பாணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மிகவும் ஆபத்தான நிலையில் தன் கடைசி நிமிடங்களை எண்ணி, அவர் உயிருக்குப் போராடி வருகிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இதைக் கருத்தில் கொண்டு, தனது தந்தையை காணொலி அழைப்பு மூலம் கடைசியாக ஒருமுறை பார்க்க, மனிதாபிமான அடிப்படையில் தனக்கு அனுமதி வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, வேலூர் மத்திய சிறையில் உள்ள, சிறைக் கைதிகள் பலரும் தங்களது உறவினர்களுடன் காணொலி அழைப்பு மூலம் பேசி வருவதையும் முருகன் சுட்டிக்காட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமரை பிச்சைக்காரர் என விமர்சித்த தயாநிதிமாறன் மன்னிப்புக் கேட்க வேண்டும் - பாஜக தலைவர் முருகன் கண்டனம்!