ETV Bharat / state

ஆளுநர் புரோகித் இரக்கமில்லா அரக்கனா...! கிளப்பிவிட்ட துரைமுருகன்

வேலூர்: ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் மவுனம் காப்பது அவரது இருதயத்தில் இரக்கம் இல்லை என்றுதான் பொருள் என திமுக பொருளாளர் துரைமுருகன் வேதனைபட தெரிவித்துள்ளார்.

duraimurugan
author img

By

Published : May 11, 2019, 10:28 AM IST

வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் வேலூரில் புதிய திருமண மண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளார். இந்த மண்டபத்தின் திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் மு.க. ஸ்டாலின் மண்டபம் திறப்பு விழாவிற்கு வரவில்லை. அவருக்கு பதில் திமுக பொருளாளர் துரைமுருகன் விழாவில் பங்கேற்றார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், 'ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றமே பச்சைக்கொடி காட்டிய பின்பும் ஆளுநர் மவுனம் காத்துவருவது வருத்தத்துக்குரியது.
இனிமேலும், அவர்களை விடுதலை செய்யாவிட்டால் ஆளுநருக்கு இருதயத்தில் இரக்கம் என்றுதான் பொருள். இரக்கமில்லா அரக்கன் என்று கம்பர் ராவணேஸ்வரனை சொன்னார். அப்படி தமிழ்நாடு மக்கள் சொல்லுகிற நிலையை ஆளுநர் ஏற்படுத்த மாட்டார் என்று நான் நம்புகிறேன்.
ஆளுநர் பிள்ளை குட்டி பெற்றவர். அரசியலில் நீண்ட காலம் இருந்தவர். எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக் கூடியவர். எனவே இவர்களை விடுதலை செய்து அவருடைய வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறப்பு அம்சத்தைப் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்' எனக் கூறினார்.

Intro:7 பேரின் விடுதலை விவகாரம்

ஆளுநருக்கு இதயத்தில் இரக்கம் இல்லை - வேலூரில் துரைமுருகன் பேட்டி

Body:வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் வேலூரில் புதிய திருமண மண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளார் இந்த மண்டபத்தின் திறப்பு விழாவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கடைசி நேரத்தில் மு க ஸ்டாலின் மண்டபம் திறப்பு விழாவிற்கு வரவில்லை அவருக்கு பதில் திமுக பொருளாளர் துரைமுருகன் விழாவில் பங்கேற்றார் விழா முடிந்த பிறகு நிருபர்களிடம் துரைமுருகன்கூறுகையில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நாட்டிலுள்ள சமூக அமைப்புகள் கேட்டார்கள் மனிதாபிமானமுள்ளவர்கள் கேட்டார்கள் பிறகு சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்டார்கள் ஆனால் இதுவரையில் விடுதலை நடைபெறவில்லை கடைசியாக உச்சநீதிமன்றமே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பச்சைக்கொடி காட்டிய பிறகும் இன்னும் ஆளுநர் மௌனம் சாதிப்பது வருத்தத்திற்குரியது இனிமேலும் அவர்களை விடுதலை செய்யாவிட்டால் இதயத்தில் இரக்கம் இல்லை என்றுதான் பொருள் இரக்கமில்லா அரக்கன் என்று கம்பர் ராவணேஸ்வரனை சிக்கினார் அப்படி தமிழ்நாட்டு மக்கள் சொல்லுகின்ற நிலையை நமது ஆளுநர் ஏற்படுத்த மாட்டார் என்று கருதுகிறேன் அவர் பிள்ளை குட்டி பெற்றவர் அரசியலில் நீண்ட காலம் இருந்தவர் எல்லோரிடத்திலும் அன்பாக பழக கூடியவர் எனவே இவர்களை விடுதலை செய்து அவருடைய வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறப்பு அம்சத்தை பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் " இவ்வாறு துரைமுருகன் கூறினார்

நிகழ்ச்சியை ஸ்டாலின் புறக்கணித்தது ஏன்?

இன்று நடைபெற்ற மண்டபம் திறப்பு விழாவில் மு க ஸ்டாலின் வருவார் என தெரிவிக்கப்பட்டதால் வேலூரில் திமுகவினர் உற்சாகமாக இருந்தனர் ஸ்டாலினை வரவேற்பதற்காக வேலூர் நகர் முழுவதும் ஆங்காங்கே கட்சிக் கொடிகள் கட்டப்பட்டன நகருக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலைகளிலும் திமுக கட்சி கொடிகள் பறக்க விடப்பட்டன ஸ்டாலினை காண்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தொண்டர்களும் காலையிலிருந்து குவிந்த வண்ணம் இருந்தனர் இந்த நிலையில் பிற்பகல் திடீரென ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் பரவியதால் தொண்டர்கள் கவலையடைந்தனர் இதுகுறித்து திமுக தரப்பில் விசாரித்தபோது, " கோயம்புத்தூரில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் மு க ஸ்டாலின் வரவில்லை என்று கடைசி நேரத்தில் தெரிவித்து விட்டார் எனக்கு பதில் துரைமுருகன் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று எம்எல்ஏ கார்த்திகேயனுமடன் ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார் மேலும் தற்போது வேலூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று மு க ஸ்டாலின் கருதியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இது தவிர சாதாரண திருமண மண்டபம் திறப்பு விழா என்பதால் கலந்து கொண்டால் தனது இமேஜ் பாதிக்கும் என்றும் மு க ஸ்டாலின் கருதி இருக்கலாம் என்றும் தொண்டர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.