வேலூர் மாவட்டத்திலிருந்து நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை திருப்பத்தூர் என்று இரு மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டுள்ளது. அதனுடைய தொடக்க விழா வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார்.
இந்நிலையில் நிகழ்வு நடக்கவுள்ள இடத்தை இன்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரணமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் அரசு அலுவலர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயக்குமார், "வருகின்ற 28ஆம் தேதி முதலமைச்சர் திருப்பத்தூர் வருகை தந்து புதிய மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கான வரைபடத்தையும் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவிருக்கிறார்.
அரசு திட்டங்கள் மக்களிடையே விரைவாகச் சென்றடைவதற்கும், அனைத்து தரப்பினருக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்பதற்கும் தான் புதிய மாவட்டங்கள், புதிய கோட்டங்கள் உருவாக்கப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: பூமி பூஜையில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர்!