ETV Bharat / state

"தமிழகத்தில் புதிதாக 28 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டம்" - அமைச்சர் எ.வ.வேலு - வேலூர் செய்திகள்

Minister E.V.Velu press meet: தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை ரயில்வே கடவுப் பாதைகளில் புதிதாக 28 மேம்பாலங்கள் இந்த ஆண்டு அமைக்கப்படுகிறது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Minister E.V Velu press meet
அமைச்சர் எ.வ.வேலு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 3:56 PM IST

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

வேலூர்: வேலூரில் உள்ள அரசு பெண்ட்லேன்ட் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு ரூ.198 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "வேலூரில் கட்டப்பட்டு வரும் பெண்ட்லேன்ட் மருத்துவமனை
7 மாடி கட்டடமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை சுமார் 18 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

வேலூர் - விரிஞ்சிபுரம் பாலாற்றில் மேம்பாலம் கட்டுவதற்கான திட்டங்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. திட்ட மதிப்பீடு பணிகள் முழுமை பெற்ற பின்னர், தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், தமிழகத்தில் உள்ள ரயில்வே கிராசிங் பகுதிகளில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல இடங்களில் நிலம் கையகப்படுத்துவதில் 10 ஆண்டுகளாக காலதாமதம் ஏற்பட்டு வந்தது. எனவே அது குறித்து ஆய்வு செய்து, பணிகள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்தும் பணிகள் விரைந்து முடிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 28 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படவ உள்ளது. காட்பாடியிலும் புதிய ரயில்வே மேம்பாலம் ஒன்று விரைவில் அமையும்" என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் லாரிகள் இன்று இயங்காது… வரி உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.