ETV Bharat / state

பொங்கல் பரிசு வாங்க குவிந்த பொதுமக்கள் - தமிழ்நாடு செய்திகள்

திருப்பத்தூர்: தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வாணியம்பாடியைச் சேர்ந்த நியாயவிலைக் கடைகளின் முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

Vaniyambadi
Vaniyambadi ration shop
author img

By

Published : Jan 9, 2020, 7:58 PM IST

தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்புப் பொங்கல் பரிசு வழங்க, தமிழ்நாடு அரசு 2,245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 3 லட்சத்து 12 ஆயிரத்து 971 குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு, அந்தந்த கிராம நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வாணியம்பாடி நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசு பெறும் மக்கள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, ஐந்து கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்புத்துண்டு ஆகியவற்றுடன் 1000 ரூபாய் ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசுப் பை இன்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்த கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக் கடையில் நேற்று முதல் பொங்கல் பரிசு வாங்குவதற்காக டோக்கன் விநியோகிக்கப்பட்டுவருகிறது. அப்பகுதியிலுள்ள 1200 குடும்ப அட்டைதாரர்களில், நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு மட்டுமே இந்த டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டும் கூட ஏராளமான பொதுமக்கள் அங்கே குவிந்ததையடுத்து, பாதுகாப்புக்காக காவல் துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் 282 நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம்

Intro:Body:

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையையெட்டி தமிழகத்தில் உள்ள 2 கோடியே 5இலட்சம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு 2245 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டது

அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3,12,971 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு அந்தந்த கிராம நியாய விலைக் கடைகளில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 1 கிலோ பச்சரசி, 1 கிலோ சர்க்கரை, 20,கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்பு துண்டு, 1000 ரூபாய் ரொக்கப்பணம், பொங்கல் பை 1 அடங்கிய பொங்கல் இன்று வழங்கப்படுவதையெட்டி

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் கற்பகம் கூட்டுறவு நியாயவிலை கடை எண் 10 இயங்கி வருகிறது இந்த கடையில் 1200 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர் இங்கு பொங்கல் பரிசு வாங்குவதற்காக நேற்று முதல் டோக்கன் வினியோகம் செய்து நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்தும் கூட ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்துள்ளனர் பொதுமக்கள் குவிந்தது அதையடுத்து போலீசார் தற்போது அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்....
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.