வேலூர்: மாண்டஸ் புயல் காரணமாகத் தொடர்ந்து பெய்த மழையினால் அரியூர் ஏரி நிரம்பியதை அடுத்து, உபரி நீர் வெளியேறி வருகிறது. உபரி நீர் வெளியேறும் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அம்மையப்பன் நகரில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.ஒரு சில இடங்களில் இடுப்பளவுக்கு நீர் தேங்கியுள்ளதால் மக்கள் தங்களின் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், வேலூரிலிருந்து அரியூர் செல்லும் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனிடையே நேற்று (டிச.10) வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். அப்போது, தங்கள் பகுதியில் கால்வாயை முறையாகத் தூர்வாரவில்லை அப்பகுதியினர் குற்றம் சாட்டினர். இதற்கிடையே, ஆக்கிரமிப்புகளால் ஏரி நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதாகவும், இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதியினர் மேலும் குற்றம்சாட்டினர். அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் உடனாக நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் அசோக்குமார், 'அரியூர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும்; தற்போதைக்கு தற்காலிக தீர்வாக எதிர்ப்புறம் உள்ள தெருவின் ஓரம் கால்வாய் வெட்டி அரியூர் ஏரியின் உபரி நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: சென்னை மெரினாவில் கரை ஒதுங்கிய மிதவை.. நடந்தது என்ன?