வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட வசந்தபுரம் 58ஆவது வார்டு பர்மா காலனி பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இங்குத் தனியாருக்குச் சொந்தமான இடத்தில், தனியார் நிறுவன செல்போன் டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
ஆனால் இங்கு டவர் அமைத்தால் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டதால், அப்பணி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பர்மா காலனியில் நேற்று (ஜூலை 20) இரவோடு, இரவாக டவர் அமைக்கும் பணி நடைபெற்றதாகக் கூறி அப்பகுதியில் மக்கள் இன்று (ஜூலை 21) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வேலூர் தெற்கு காவல் துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர். இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் போராட இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மணல் கடத்தல்காரர்களிடம் மாமூல்: காவலர் பணியிடை நீக்கம்