வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே அமைந்துள்ள இந்து மேல்நிலைப்பள்ளியின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் 100 மீட்டருக்கு முன்னரே தடுப்பு கம்பிகளை அமைத்துள்ளனர். ஆம்பூர் மட்டுமின்றி இதே போன்று பல்வேறு இடங்களில் தடுப்பு கம்பிகள் வைத்திருப்பதால் போக்குவரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு கம்பியை கடக்க 1 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவளைந்து வரவேண்டியுள்ளதால், இருசக்கர வாகனத்திற்கு மட்டும் அனுமதியளிக்க வாகன ஓட்டிகள், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். நீண்ட வாக்குவதத்திற்கு பிறகு இருசக்கர வாகனங்கள் மட்டும் அவ்வழியாக அனுமதிக்கப்பட்டன.