வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் முதுநிலை காவலராக பணியாற்றி வருபவர் உமயன். சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வரும் ஆரணியை சேர்ந்த மாபாஷா என்பவர் தன்னை ஒரு செல்லிலிருந்து வேறு ஒரு செல்லுக்கு மாற்ற சொல்லி உமயனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சிறை அலுவலர் மோகன்குமார், பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் மாபாஷா மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் 2ஆவது நாளாக மழை: பழங்குடியின மக்களுக்கு முகாம் அமைப்பு