வேலூர்: வேலூர் அருகே காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(40). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில், காவலராக பணியாற்றினார்.
இந்நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த காவலர், குடும்பத் தகராறு காரணமாக நேற்று (ஜூலை 25) தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரியூர் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கால் கஞ்சா விற்பனையாளராக மாறிய கார் ஓட்டுநர் கைது