வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜானி என்ற ஜான் பால்ராஜ் (33). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காட்பாடி காவல் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு இவர் மீது திருட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜானி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவருகிறார்.
இதனால், காட்பாடி நீதிமன்றத்தில் நீதிபதி முன் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மேற்கூறிய தினத்தில் ரவுடி ஜானி ஆஜராக தவறும் பட்சத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் காட்பாடி பகுதியில் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தலைமறைவாக உள்ள ரவுடி ஜானி குடும்பத்தை காவல் துறை சித்ரவதை செய்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசு உதவிபெறும் பள்ளியின் செயலால் 20 மாணவர்களுக்கு நேர்ந்த நிலை!