ETV Bharat / state

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் லாரிகளுடன் பறிமுதல்! - vellore police seized one crore worth gudkha and vehicles

கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான குட்கா பொருள்கள், லாரிகள் பறிமுதல். தப்யோடிய ஓட்டுனர்களுக்கு வலைவீச்சு.

police seized one crore worth gudkha and vehicles
ஒரு கோடி மதிப்பிலான குட்கா பொருள்கள் லாரிகளுடன் பறிமுதல்
author img

By

Published : Mar 16, 2020, 9:33 AM IST

கர்நாடக மாநிலத்திலிருந்து வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த சேர்காடு பகுதிக்கு, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வரப்படுவதாக திருவலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட இரண்டு லாரிகள் அடுத்தடுத்து வேகமாக வந்தன. லாரிகளை நிறுத்த முயற்சி செய்தபோது நிற்காமல் சென்றதையடுத்து காவல்துறையினர் இரண்டு லாரிகளையும் துரத்தி சென்றனர். அதனால் திருவலம் அடுத்த சிவானந்தம் நகர் பகுதியில் இரண்டு லாரிகளையும் நிறுத்தி விட்டு லாரி ஓட்டுனர்கள் இறங்கி தப்பி ஓடினர்.

இதனை அடுத்து இரண்டு லாரிகளையும் காவல் நிலையம் கொண்டுசென்று சோதனை செய்தபோது அவற்றின் மேல்பகுதியில் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதனை அகற்றி பார்த்தபோது அதனடியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5 டன்னுக்கும் அதிகமான பான்மசாலா குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

ஒரு கோடி மதிப்பிலான குட்கா பொருள்கள் லாரிகளுடன் பறிமுதல்

இதன் மதிப்பு சுமார் ரூ. 50 லட்த்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.