வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (36). இவர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் தலைமை சிறைக்காவலராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் இன்று காலை பணி முடித்துவிட்டு, அண்ணா சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஊரீசு கல்லூரி எதிரே எதிர்பாராதவிதமாக சாலையில் அறுந்துகிடந்த மாஞ்சா நூல் காவலரின் கழுத்தை அறுத்தது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த, அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், இது குறித்து வேலூர் தெற்கு காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், படுகாயங்களுடன் இருந்த காவலரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தடைசெய்யப்பட்ட மாஞ்சா நூல் சாலையில் இருந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலை பார்க்க சொன்ன உதவி ஆய்வாளரைத் தாக்கிய காவலர்