வேலூர்: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் காவல் சரகத்தில் மாதந்தோறும் நடைபெற்று வந்த காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்தது.
காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்
இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், இன்று (பிப்.24) வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் டிஐஜி ஆனி விஜயா தலைமையில் நடைபெற்றது.
இதில் மொத்தம் 15 காவலர்கள் தங்கள் கோரிக்கைகள், குறைகள் அடங்கிய மனுவை டிஐஜியிடம் வழங்கினர். இதில் உடனடியாக 13 மனுக்கள் மீது டிஐஜி ஆனி விஜயா தீர்வுகண்டார்.
மனுக்கள் மீது நடவடிக்கை
இதுகுறித்து டிஐஜி ஆனி விஜயா கூறியதாவது, "காவலர்கள் மத்தியில் உள்ள குறைகளைப் போக்க இம்மாதிரியான முகாம் நடத்தப்படுகிறது. இன்று மிகக் குறைந்த அளவே மனுக்கள் வந்தன. அதன் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களிலும் காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் தொடர்ந்து நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: பதற வைக்கும் வீடியோ