வேலூரில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முரசொலி மாறன் பிறந்தநாளன்று அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு ஊரடங்கை மீறி திமுகவினர் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்தனர்.
அதில் குறிப்பாக அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த வேலூர் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வி.எஸ். விஜய், வேலூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், அணைகட்டு திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் வேலூர் மத்திய மாவட்டச் செயலாளருமான ஏ.பி. நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக விஏஓ விஜய் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஊரடங்கை மீறிய திமுகவினர் 25 பேர் மீது நோய்ப் பரப்பும் வகையில் செயல்பட்டது, பேரிடர் கால விதியை மீறியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பி: தொண்டர்கள் ஆவேசம்