வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியில் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 4,700 லிட்டா் சாராய ஊறல்கள் இன்று (ஜன.21) அழிக்கப்பட்டன. அணைக்கட்டு வட்டத்திலுள்ள மலைப்பகுதிகளில் அதிகளவில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதனைத் தடுக்க, போலீசார் தீவிர சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, வேலூா் மாவட்ட கலால் பிரிவு காவல் ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீசார் இன்று அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப்பகுதியில் சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீஸாரை கண்டதும் அங்கிருந்த சிலா் தப்பியோடினர். தொடா்ந்து, போலீசார் அங்கு 4 இடங்களில் சோதனையிட்டபோது பேரல்களில் சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பேரல்களை அகற்றி அதிலிருந்த 4,700 லிட்டா் சாராய ஊறல்களை அழித்தனா். அதோடு சாராயம் காய்ச்ச தயாராக வைத்திருந்த பொருள்களையும் கைப்பற்றி அழித்தனா்.
இதையும் படிங்க: கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.641 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங்