வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் ஜி.ஜி.ரவி. பிரபல தொழிலதிபரானஇவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இந்நிலையில்இவரது மகன்களான கோகுல், தமிழ்மணி ஆகிய இருவரும்நேற்று இரவு வேலூர்ஆற்காடு சாலையில் உள்ளபிள்ளையார் கோயில் தெருவில் தங்களது காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாதகும்பல்அவர்கள் கார் மீது பெட்ரோல் குண்டை வீசி, இருவரையும் சுற்றி வளைத்து தாக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இருப்பினும்அவர்களை விடாமல்துரத்தினர். இதனால்இருவரும் ஓடிக் கொண்டே செல்போன் மூலம்தங்களது ஆதரவாளர்களுக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த அவர்கள் தோட்டப்பாளையம்பாண்டி தெருவில் பதுங்கியிருந்த அடையாளம் தெரியாதகும்பலைதாக்கச்சென்றனர்.
அப்போது அங்கு தயாராக இருந்த அக்கும்பலைச் சேர்ந்தவர்கள்கையில் இருந்த பீர் பாட்டில்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்துபோன கோகுல், தமிழ்மணியின் ஆதரவாளர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் புகுந்தனர்.
ஆனாலும் அந்தகும்பல் விடுதிற்குள் நுழைந்து வளாகத்தில் நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல் விடுதியையும் சேதப்படுத்தினார்கள்.
இதையடுத்து தமிழ்மணி, கோகுல் சம்பவம் குறித்து காவல் துறையினருக்குதகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர்வருவதை அறிந்த அடையாளம் தெரியாதகும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. பின்னர் காவல்துறையினர்விடுதியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அக்கும்பலைதேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.