வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள கொத்தகுப்பம் கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராம மக்களுக்கு நீண்ட நாள்களாக குடிநீர் முறையாக வழங்குவதில்லை. வாரத்தில் ஒரு நாள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது.
இதனால் குடிநீருக்குப் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிணற்றிற்குச் சென்று, தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென இன்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு: பசியில் வாடும் கிராமம்