வேலூர் மாவட்டம், காட்பாடி வன்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரகு. இவர் அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஆராய்ச்சி மையத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று (அக்.12) வன்டறந்தாங்கலில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தது காட்பாடி ரயில் நிலையம் எதிரே வேலூர் நோக்கி வந்த மினி வேன் ரகுவின் வாகனத்தில் மோதியது.
இதில் ரகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காட்பாடி காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க : இரு சக்கர வாகன விபத்து- சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிப்பு!